திருக்கோவலூர்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட முதல் திவ்யதேசம் திருக்கோவலூர்

Sunday, June 19, 2022

ஆழ்வார்கள் கோஷ்டி - திருக்கோவலூர்


 



ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Saturday, February 12, 2022

தை மிருகசீருஷம் - ஒன்றான திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி திருநக்ஷத்ரம்


திருக்கோவலூர்  ஒன்றான   ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமி வாழி திருநாமம் 

தையில் மிருகசீருடத்தில் தரணி வந்தோன் வாழியே*
தண் கோவலூர் நகர் விளங்கத் தானுதித்தான் வாழியே*
வையகத்தில் ஈடுரைக்கும் வாசகத்தோன் வாழியே*
வரயோகி கருணையினால் வாழ்ந்தருள்வோன் வாழியே*
செய்ய இடைகழி ஆயன் செல்வம் வளர்த்தோன் வாழியே*
சீராரும் கோவலூர் சிறக்க வந்தோன் வாழியே*
மையல் மிகு கோவல் எம் இராமானுஜ முனி வாழியே*
மலரடியும் முக்கோலும் மாநிலத்தில் வாழியே*

ஆரியர்கள் வாழ அருளிச்செயல் வாழ*
தாரணியில் பூங்கோவலூர் வாழ*
சீருடைய  மன்னு  புகழ் எம்பெருமானார் முனியே மாயவனே 
இன்னுமொரு நூற்றாண்டிரும்.

Wednesday, December 8, 2021

திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மடம் - கைசிக ஏகாதசி - பிரம்மரத உத்ஸவப் பத்திரிகை




 



ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்


திருக்கோவலூர் 26 ஆம் பட்டம் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி பட்டாபிஷேக மஹோத்ஸவ ப்ரகடனப் பத்திரிகை


 





ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்


திருக்கோவலூர் 25 ஆம் பட்டம் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமியின் பரமபத ப்ராப்தி

ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபநாசார்ய உபய வேதாந்தாசார்யராய் எழுந்தருளியிருந்த திருக்கோவலூர் 25 ஆம் பட்டம் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ ராமாநுஜாசார்யார் ஸ்வாமி ப்லவ வருஷம் ஐப்பசி மாதம் 23 ஆம் தேதி (09-11-2021) செவ்வாய் கிழமை ஸுக்ல பக்ஷ பஞ்சமி திதியில் ஆசார்யன் திருவடி அடைந்தார்/திருநாடு அலங்கரித்தார்.

ஸ்வாமியைப் பற்றிய ஓர் பதிவு நம் கீதாசார்யன் பத்திரிகையில்


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Saturday, September 4, 2021

திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மாடாதிபதி, ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டபநாசார்ய உபய வேதாந்தாசார்யராய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாஸராமாநுஜாசார்யர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம் - ஆவணி ஆயில்யம்



தனியன்
ஸ்ரீ சௌநகாந்வய ஸரித் பரிபூர்ண சந்த்ரம்
ஸ்ரீ வேங்கடேச குரூத்தம புத்ர ரத்நம்|
தஸ்மாதவாப்த நிகமாந்த ரஹஸ்ய ஜாலம்
ஸ்ரீ ஸ்ரீநிவாஸ குருவர்யம் அஹம் ப்ரபத்யே ||

வாழித்திருநாமம்
வாழிய நல்திரு வேங்கடவர் மாதகவால்
வாழ்ந்திடும் ஸ்ரீநிவாச மாகுரவன் - வாழியவன்
மாறன் மறையும் மும்மந்திரச் செம்பொருளும்
தேறிடச் சீடர்க்கு உரைக்குஞ் சீர்

ஆவணியில் ஆயில்யத்து அவதரித்தோன் வாழியே
அலகரையும் பதிவந்த தாதைசெல்வன் வாழியே
கோவலூர் ஆயனார் குணமுரைப்போன் வாழியே
குலவும் அடியார்கள்வினை கொய்தருள்வோன் வாழியே
பூவளரும் நாச்சியரால் பொலிவுற்றோன் வாழியே
பொய்கைமுதல் பதின்மர்பாப் பொருளுரைப்போன் வாழியே
காவலராம் வேங்கடவர் கழல் வாழியே
கார்பொலியும் சீநிவாச வாரியன் தாள் வாழியே

பூங்கோவலூர் வாழ ஆயன் புகழ்வாழ
தேங்குபுகழ் மாறன் மறைவாழ - தீங்கிலா
துன்னுபுகழ் சீநிவாச ராமாநுசாரியனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்

தீந்தமிழ் வேதியர் சிந்தை மகிழ்ந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்
சீர் உலகாரியர் செய்தருள் நற்கலை தீதர விளங்கிடு நாள்
கந்த மலர்ப்பொழில் குருகூர் நாதன் கலைகள் தழைத்திடுநாள்
காரமர் மேனியர் கோவல் நகர்க்கிறை கண்கள் களித்திடுநாள்
எந்தை யெதிவரர் சிந்தைக் குளிர்ந்து இனிது உகந்திடு நாள்
எழில் உறு எம்பெருமானார் சீயர் இன்புற வந்தவர் நாள்
அந்தமில் சீர் சீநிவாச முனிப்பரன் அவதாரம் செய்திடுநாள்
அழகு திகழ்ந்திடும் ஆவணியில் திரு ஆயில்யம் எனு நாளே

வாழி எதிராசன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்