ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:
பெரிய திருமொழி இரண்டாம் பத்து பத்தாம் திருமொழி:
முதல் பாசுரம்:
மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும்*
வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்*
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேலோர்* இலந்தளிரில்
கண் வளர்ந்த ஈசன் தன்னை*
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்*
தூய நான் மறையாளர் சொமுச் செய்ய*
செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்*
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*
இரண்டாம் பாசுரம்:
கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்*
தீபம் கொண்டு அமரர் தொழப் பணங்கொள் பாம்பில்*
சந்தணி மென் முலை மலராள் தாரணி மங்கை*
தாமிருவர் அடிவருடும் தன்மையானை*
வந்தனை செய்து இசையேழ் ஆறங்கம்* ஐந்து
வளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்*
சிந்தனை செய்து இரு பொழுதும் ஒன்றும்* செல்வத்
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*
மூன்றாம் பாசுரம்:
கொழுந்தலரும் மலர்ச் சோலை குழாங்கொள் பொய்கைக்*
கோள் முதலை வாழ் எயிற்றுக் கொண்டற்க்கு எள்கி*
அழுந்திய மாகளிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி*
அந்தரம்மே வரத் தோன்றி அருள் செய்தானை*
எழுந்த மலர் கரு நீளம் இருந்தில் காட்ட*
இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன் காட்ட*
செழுந்தட நீர்க்கமலம் தீவிகை போல் காட்டும்*
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*
நான்காம் பாசுரம்:
தாங்கரும்போர் மாலிபடப் பறவையூர்ந்து*
தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை*
ஆங்கரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும்*
அடியவர்கட்கு ஆரமுதம் ஆனான் தன்னை*
கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலை*
குழாவரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு*
தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த*
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*
ஐந்தாம் பாசுரம்:
கறை வளர்வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி*
கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்*
பிறை எயிற்று வாளரக்கர் சேனை எல்லாம்*
பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை*
மறை வளரப் புகழ் வளர மாடந்தோரும்*
மண்டபம் ஒண் தொளியனைத்தும் வாரமோத*
சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும்*
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*
ஆறாம் பாசுரம்:
உறியார்ந்த நறுவெண்ணெய் ஒளியால் சென்று* அங்கு
உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க*
தரியார்ந்த கருங்களிறே போல நின்று*
தடங்கண்கள் பனிமல்கும் தன்மையானை*
வெறியார்ந்த மலர்மகள் நாமங்கையோடு*
வியன் கலை எண் தோளினாள் விளங்கு* செல்வச்
செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும்*
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*
ஏழாம் பாசுரம்:
இருங்கைம்மா கரி முனிந்து பரியைக் கீறி*
இனவிடைகள் ஏழடர்த்து மருதம் சாய்த்து*
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு*
வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை*
கருங்கமுகு பசும்பாளை வெண்முத்து ஈன்று*
காய் எல்லாம் மரகதமாய் பவளம் காட்ட*
செருந்திமிகு மொட்டு அலர்த்தும் தேன்கொள் சோலைத்*
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*
எட்டாம் பாசுரம்:
பாரேறு பெரும்பாரம் தீரப்* பண்டு
பாரதத்துத் தூதியங்கி* பார்த்தன் செல்வத்
தேரேறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை*
செருக்களத்துத் திறலழியச் செற்றான் தன்னை*
போரேறு ஒன்றுடையானும் அளகைக் கோனும்*
புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல்*
சீரேறு மறையாளர் நிறைந்த* செல்வத்
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*
ஒன்பதாம் பாசுரம்:
தூவடிவின் பார்மகள் பூமங்கையோடு*
சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற*
காவடிவின் கற்பகமே போல நின்று*
கலந்தவர்கட்கு அருள் புரியும் கருத்தினானை*
சேவடிகை திருவாய் கண் சிவந்த ஆடை*
செம்பொன்செய் திருவுருவம் ஆனான் தன்னை*
தீவடிவின் சிவனயனே போல்வார்* மன்னு
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*
பத்தாம் பாசுரம்:
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை* நீல
மரதகத்தை மழை முகிலே போல்வான் தன்னை*
சீரணங்கு மறையாளர் நிறைந்த* செல்வத்
திருக்கோவலூரதனுள் கண்டேன் என்று*
வாரணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்*
வாள் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார்*
காரணங்களால் உலகம் கலந்தங்கேத்தக்*
கரந்தெங்கும் பரந்தானைக் காண்பர் தாமே*
பாசுர அர்த்தங்கள் பின்வரும் பதிப்புகளில் பதிவு பண்ணப்படும்.
தாசானு தாசன்
இராமானுஜ சிஷ்யன்
No comments:
Post a Comment