திருக்கோவலூர்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட முதல் திவ்யதேசம் திருக்கோவலூர்

Tuesday, March 26, 2013

திருநெடுந்தாண்டகம் ஆறாம் பாசுர அர்த்தம்:

ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

பாசுரம்:

அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன்*
          அஞ்சிறைப் புள் தனிப்பாகன் அவுணர்க்கு என்றும்*
சலம் புரிந்து அங்கு அருள் இல்லாத் தன்மையாளன் *
           தான் உகந்த ஊரெல்லாம் தன் தாள் பாடி*
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த*
           நெடுவேய்கள் படுமுத்த முந்த உந்தி*
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்*
          பூங்கோவலூர் தொழுதும் போது நெஞ்சே!

பாசுர அர்த்தம்:
ஐந்தாம் பாசுரத்தில் திரிவிக்கிரம அவதார விசேஷத்தை அனுபவித்தார் ஆழ்வார். அனுபவத்தோடு மட்டும் அல்லது திரிவிக்கிரம அவதாரமானது என்றோ நடந்த அவதாரமாயிட்ரே நாம் கண்களால் கண்டு அனுபவிக்க முடியாமல் போனதே என்று வருந்தியிருக்க அடியாருக்கு எளியவனான எம்பெருமானும் ஆழ்வீர் அவதார காலத்துக்கு பிற்பட்டோரும் கண்டு அனுபவிக்க வேணும் என்பதற்காக அன்றோ நாம் திருக்கோவலூரில் சந்நிதி பண்ணி இருப்பது; என்று உலகளந்த திருக்கோலத்திலே சேவை சாதிக்கும் திருக்கோவலூரை காட்டிக் கொடுத்தானாம் ஆழ்வாருக்கு.
போதும் போதும் என்று சொன்னாலும் அபாரமாக அள்ளி அள்ளி கொடுக்க வல்ல பெரிய கையை உடையவனும், நித்ய சூரிகளுக்குத் தலைவனும், அழகிய சிறகை உடைய பெரிய திருவடிக்குப் பாகனும், அசுரப் பிரக்ருதிகள் பக்கல் சீற்றம் கொண்டு அவர்கள் விஷயத்தில் எப்போதும் சீற்றத்துடன் இருப்பவனும்(அஹங்கார மமகாரங்களோடு கூடினவர்களாய் பகவத் பக்தியிலே பகை உள்ளவர்களை அசுரப் பிரக்ருதிகள் என்று சொல்லப் படுகிறார்கள்) இப்படி எம்பெருமான் உகந்து எழுந்தருளி இருக்கும் ஊர்களை எல்லாம் பாடிக்கொண்டு, பெண்ணை ஆறு என்னும் பெண்மணி திருக்கோவலூர் ஆயனாரை அனுபவிக்கப் போகிறோம் என்ற சந்தோஷ மிகுதியாலே கரையையும் தாண்டி குடியிருப்பு பகுதிகளில் உள்புகுந்து, வெள்ளத்தால் கொண்டு வரப்பட்ட பெரிய மூங்கில்களிலிருந்து உண்டாகிற முத்துக்களை வயலிலே கொண்டு தள்ள, உழவர்களும் அவை தம்முடைய பயிர்களுக்கு களை என்று தள்ள, அப்படித் தள்ளியும் தடுக்க முடியாத படிக்கு வயல்களில் பறந்ததாம் முத்துக்கள்.இப்படி வயல்களிலே பொன் போன்ற நெற்ப்பயிர்கள் விளையப்  பெற்ற பூங்கோவலூரை சேவிப்போம் நெஞ்சே வா! என்று மங்களாசாசனம்.
 இந்த உரையில் குற்றம் குறை இருக்குமாயின் அடியேனைத் திருத்திப் பணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.
தாசானு தாசன் 
இராமானுஜ சிஷ்யன்.

Monday, March 11, 2013

Tirukkovalur Sri Dehaleesa Perumal Brahmothsava Pathrikai









Tirukkovalur Trivikrama Swami Devasthanam
Tirukkovalur Srimath Emberumaanaar Jeeyar Mutt

Tirukkovalur.

Dasanu Dasan

Iramanuja Sishyan

Wednesday, January 16, 2013

Tirukkovalur Aayanaar Sayana Uthsavam

திருக்கோவலூர் ஆயனார் சயன உத்சவம்:








Monday, January 14, 2013

திருக்கோவலூர் ஸ்ரீ த்ரிவிக்ரம ஸ்வாமி தேவஸ்தான நித்ய திருவாராதன கால அட்டவணை:


ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 

ஸ்ரீய: பதியான எம்பெருமான் கோயில் கொண்டு அர்ச்சாவதாரமாக எழுந்தருளி இருந்து, அழ்வர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள் நூற்றுஎட்டில் பஞ்சக்ரிஷ்ணாரண்ய க்ஷேத்ரம் என்றும், நடு நாட்டு திருப்பதி என்றும், கோபாலபுரம், பூங்கோவலூர் என்றும் சிறப்புடன் விளங்கும் திருக்கோவலூரில் மிருகண்டு மகரிஷி மற்றும் முதல் ஆழ்வார்களுக்கு ப்ரத்யக்ஷமாகி, வையம் தகளியா, அன்பே தகளியா, திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்ற பாசுரங்களால் முதலாழ்வார்களாலும், மஞ்சாடு வரையேழும், தூவடிவில் பார்மகள் பூமங்கையோடு, அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர்வேந்தன், சீரார் திருவேங்கடமே திருக்கோவலூரே, மன்னும் இடைகழி எம்மாயவனை என்னும் படி திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்று, த்ரிவிக்ரமன் திருக்கோலத்துடன் தேஹளீசன் மற்றும் ஆயனார் என்ற திருநாமங்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அனுக்ரஹித்து வருகிறார்.

ஸ்ரீ த்ரிவிக்ரம சுவாமிக்கு வருட உத்சவம், மாத உத்சவம், பக்ஷ உத்சவம் ஆகியவை ஆகமங்களில் கூறியுள்ளவாறு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் ஆறு கால நித்ய திருவாராதனமும் நடைபெறுகிறது. 

நித்ய திருவாராதன அட்டவணை:

காலை:
ஆறு மணிக்கு விஸ்வரூப சேவை
எட்டுமணிக்கு திருவாராதனம் - நடையடைப்பு 
ஒன்பது மணிக்கு திருப்பாவை சாற்றுமறை
ஒன்பது அரை மணிக்கு மீண்டும் நடை திறப்பு
பிற்பகல் பன்னிரண்டு மணிக்கு உச்சிகாலம் - நடை அடைப்பு
மாலை நான்கு மணிக்கு நடைதிறந்து சஹஸ்ரநாம அர்ச்சனை
ஐந்தரை மணிக்கு நித்யானுசந்தான கோஷ்டி - நடையடைப்பு
ஏழு மணிக்கு நடை திறப்பு
இரவு எட்டரை மணிக்கு அர்த்தஜாமம் மற்றும் நடையப்பு 

இந்த ஆறுகால நித்ய ஆராதனைக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் இரண்டு ஆயிரம் வரை செலவாகிறது. இந்த நித்ய ஆராதனை பக்தகோடிகளின் நன்கொடை மூலமாக சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தினசரி ஆராதனத்தில் அனைவரும் பங்கு கொண்டு நீங்காத செல்வம் பெற்று நிறைந்து வாழ வேணும் என்று பிரார்த்திக்கிறோம்.

பக்தர்கள் ஆரதனைக்கான தொகையை (ரூபாய் இரண்டு ஆயிரத்தை) ரொக்கமாகவோ, வரைவோலையாகவோ அல்லது கேட்பு வரைவோலை ஆகவோ " ஸ்ரீ த்ரிவிக்ரம சுவாமி நித்ய திருவாராதன அறக்கட்டளை" என்ற பெயரில் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீ உ. வே. ரங்கராஜன் சுவாமி,
தேவஸ்தான ஏஜன்ட்,
சந்நிதி வீதி 
ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமி திருமாளிகை
திருக்கோவலூர்.
கைப்பேசி எண்:             +91-98407 46422      

 திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி திருமாளிகை
திருக்கோவலூர்.

Tirukkovalur Srimath Emberumaar Jeeyar Swami

Sri:
Srimathe Iraamaanujaaya Nama:
Srimath Emberumaanaar Jeeyar Thiruvadigalae Saranam:




First and Second Jeeyar Swamis of Tirukkovalur Srimath Emberumaanaar Jeeyar swami mutt - Tirukkovalur.

Dasanu Dasan

Iramanuja Sishyan