ஸ்ரீ சௌநகாந்வய ஸரித் பரிபூர்ண சந்த்ரம்
ஸ்ரீ வேங்கடேச குரூத்தம புத்ர ரத்நம்|
தஸ்மாதவாப்த நிகமாந்த ரஹஸ்ய ஜாலம்
ஸ்ரீ ஸ்ரீநிவாஸ குருவர்யம் அஹம் ப்ரபத்யே ||
வாழித்திருநாமம்
வாழிய நல்திரு வேங்கடவர் மாதகவால்
வாழ்ந்திடும் ஸ்ரீநிவாச மாகுரவன் - வாழியவன்
மாறன் மறையும் மும்மந்திரச் செம்பொருளும்
தேறிடச் சீடர்க்கு உரைக்குஞ் சீர்
ஆவணியில் ஆயில்யத்து அவதரித்தோன் வாழியே
அலகரையும் பதிவந்த தாதைசெல்வன் வாழியே
கோவலூர் ஆயனார் குணமுரைப்போன் வாழியே
குலவும் அடியார்கள்வினை கொய்தருள்வோன் வாழியே
பூவளரும் நாச்சியரால் பொலிவுற்றோன் வாழியே
பொய்கைமுதல் பதின்மர்பாப் பொருளுரைப்போன் வாழியே
காவலராம் வேங்கடவர் கழல் வாழியே
கார்பொலியும் சீநிவாச வாரியன் தாள் வாழியே
பூங்கோவலூர் வாழ ஆயன் புகழ்வாழ
தேங்குபுகழ் மாறன் மறைவாழ - தீங்கிலா
துன்னுபுகழ் சீநிவாச ராமாநுசாரியனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்
தீந்தமிழ் வேதியர் சிந்தை மகிழ்ந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்
சீர் உலகாரியர் செய்தருள் நற்கலை தீதர விளங்கிடு நாள்
கந்த மலர்ப்பொழில் குருகூர் நாதன் கலைகள் தழைத்திடுநாள்
காரமர் மேனியர் கோவல் நகர்க்கிறை கண்கள் களித்திடுநாள்
எந்தை யெதிவரர் சிந்தைக் குளிர்ந்து இனிது உகந்திடு நாள்
எழில் உறு எம்பெருமானார் சீயர் இன்புற வந்தவர் நாள்
அந்தமில் சீர் சீநிவாச முனிப்பரன் அவதாரம் செய்திடுநாள்
அழகு திகழ்ந்திடும் ஆவணியில் திரு ஆயில்யம் எனு நாளே
வாழி எதிராசன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்