திருக்கோவலூர்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட முதல் திவ்யதேசம் திருக்கோவலூர்
Sunday, January 27, 2013
Wednesday, January 16, 2013
Monday, January 14, 2013
திருக்கோவலூர் ஸ்ரீ த்ரிவிக்ரம ஸ்வாமி தேவஸ்தான நித்ய திருவாராதன கால அட்டவணை:
ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீய: பதியான எம்பெருமான் கோயில் கொண்டு அர்ச்சாவதாரமாக எழுந்தருளி இருந்து, அழ்வர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள் நூற்றுஎட்டில் பஞ்சக்ரிஷ்ணாரண்ய க்ஷேத்ரம் என்றும், நடு நாட்டு திருப்பதி என்றும், கோபாலபுரம், பூங்கோவலூர் என்றும் சிறப்புடன் விளங்கும் திருக்கோவலூரில் மிருகண்டு மகரிஷி மற்றும் முதல் ஆழ்வார்களுக்கு ப்ரத்யக்ஷமாகி, வையம் தகளியா, அன்பே தகளியா, திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்ற பாசுரங்களால் முதலாழ்வார்களாலும், மஞ்சாடு வரையேழும், தூவடிவில் பார்மகள் பூமங்கையோடு, அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர்வேந்தன், சீரார் திருவேங்கடமே திருக்கோவலூரே, மன்னும் இடைகழி எம்மாயவனை என்னும் படி திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்று, த்ரிவிக்ரமன் திருக்கோலத்துடன் தேஹளீசன் மற்றும் ஆயனார் என்ற திருநாமங்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அனுக்ரஹித்து வருகிறார்.
ஸ்ரீ த்ரிவிக்ரம சுவாமிக்கு வருட உத்சவம், மாத உத்சவம், பக்ஷ உத்சவம் ஆகியவை ஆகமங்களில் கூறியுள்ளவாறு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் ஆறு கால நித்ய திருவாராதனமும் நடைபெறுகிறது.
நித்ய திருவாராதன அட்டவணை:
காலை:
ஆறு மணிக்கு விஸ்வரூப சேவை
எட்டுமணிக்கு திருவாராதனம் - நடையடைப்பு
ஒன்பது மணிக்கு திருப்பாவை சாற்றுமறை
ஒன்பது அரை மணிக்கு மீண்டும் நடை திறப்பு
பிற்பகல் பன்னிரண்டு மணிக்கு உச்சிகாலம் - நடை அடைப்பு
மாலை நான்கு மணிக்கு நடைதிறந்து சஹஸ்ரநாம அர்ச்சனை
ஐந்தரை மணிக்கு நித்யானுசந்தான கோஷ்டி - நடையடைப்பு
ஏழு மணிக்கு நடை திறப்பு
இரவு எட்டரை மணிக்கு அர்த்தஜாமம் மற்றும் நடையப்பு
இந்த ஆறுகால நித்ய ஆராதனைக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் இரண்டு ஆயிரம் வரை செலவாகிறது. இந்த நித்ய ஆராதனை பக்தகோடிகளின் நன்கொடை மூலமாக சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தினசரி ஆராதனத்தில் அனைவரும் பங்கு கொண்டு நீங்காத செல்வம் பெற்று நிறைந்து வாழ வேணும் என்று பிரார்த்திக்கிறோம்.
பக்தர்கள் ஆரதனைக்கான தொகையை (ரூபாய் இரண்டு ஆயிரத்தை) ரொக்கமாகவோ, வரைவோலையாகவோ அல்லது கேட்பு வரைவோலை ஆகவோ " ஸ்ரீ த்ரிவிக்ரம சுவாமி நித்ய திருவாராதன அறக்கட்டளை" என்ற பெயரில் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஸ்ரீ உ. வே. ரங்கராஜன் சுவாமி,
தேவஸ்தான ஏஜன்ட்,
சந்நிதி வீதி
ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமி திருமாளிகை
திருக்கோவலூர்.
கைப்பேசி எண்: +91-98407 46422
திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி திருமாளிகை
திருக்கோவலூர்.
Subscribe to:
Posts (Atom)