திருக்கோவலூர்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட முதல் திவ்யதேசம் திருக்கோவலூர்
Friday, December 28, 2012
Wednesday, December 19, 2012
Saturday, November 10, 2012
திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர்
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் மடம் திருக்கோவிலின் நுழைவு வாயிலுக்கு முன்பாக உள்ள பதினாறுகால் மண்டபத்தின் எதிரே அமைந்துள்ளது. திருக்கோவலூர் த்ரிவிக்ரம சுவாமி தேவஸ்தானம் திருக்கோவலூர் ஜீயர் சுவாமி மடத்தைச் சேர்ந்தது ஆகும். ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமியின் நியமனத்துடனே நிர்வாகங்கள், கைங்கர்யங்கள் மற்றும் உத்சவம் அனைத்தும் நடைபெற்று வருகிறது. இந்த திருமடத்தில் ஜீயர் சுவாமியாக எழுந்தருளி இருந்த முதல் பன்னிரண்டு சுவாமிகள் சன்யாசிகளாகவும், அதன் பிறகு எழுந்தருளி இருந்த/வர்த்தமான சுவாமி உட்பட அனைவரும் கிருஹஸ்தர்கள் ஆவர். க்ருஹச்தர்களாக இருந்தாலும் அவர்களையும் ஜீயர் சுவாமி என்றே போற்றப்படுகிறார்கள்.
திருமடத்தின் நுழைவு வாயில்:
ஒன்னான ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமியும் - வர்த்தமான சுவாமியும்
அடுத்த பதிவு தொடக்கமாக திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமியின் வைபவத்தை சேவிக்கலாம்.
தாசானு தாசன்
இராமானுஜ சிஷ்யன்
திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமி திருவடிகளே சரணம்
Monday, September 10, 2012
திருக்கோவலூர் திவ்யதேச பாசுரங்கள்:
ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:
பெரிய திருமொழி இரண்டாம் பத்து பத்தாம் திருமொழி:
முதல் பாசுரம்:
மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும்*
வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்*
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேலோர்* இலந்தளிரில்
கண் வளர்ந்த ஈசன் தன்னை*
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்*
தூய நான் மறையாளர் சொமுச் செய்ய*
செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்*
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*
இரண்டாம் பாசுரம்:
கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்*
தீபம் கொண்டு அமரர் தொழப் பணங்கொள் பாம்பில்*
சந்தணி மென் முலை மலராள் தாரணி மங்கை*
தாமிருவர் அடிவருடும் தன்மையானை*
வந்தனை செய்து இசையேழ் ஆறங்கம்* ஐந்து
வளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்*
சிந்தனை செய்து இரு பொழுதும் ஒன்றும்* செல்வத்
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*
மூன்றாம் பாசுரம்:
கொழுந்தலரும் மலர்ச் சோலை குழாங்கொள் பொய்கைக்*
கோள் முதலை வாழ் எயிற்றுக் கொண்டற்க்கு எள்கி*
அழுந்திய மாகளிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி*
அந்தரம்மே வரத் தோன்றி அருள் செய்தானை*
எழுந்த மலர் கரு நீளம் இருந்தில் காட்ட*
இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன் காட்ட*
செழுந்தட நீர்க்கமலம் தீவிகை போல் காட்டும்*
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*
நான்காம் பாசுரம்:
தாங்கரும்போர் மாலிபடப் பறவையூர்ந்து*
தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை*
ஆங்கரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும்*
அடியவர்கட்கு ஆரமுதம் ஆனான் தன்னை*
கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலை*
குழாவரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு*
தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த*
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*
ஐந்தாம் பாசுரம்:
கறை வளர்வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி*
கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்*
பிறை எயிற்று வாளரக்கர் சேனை எல்லாம்*
பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை*
மறை வளரப் புகழ் வளர மாடந்தோரும்*
மண்டபம் ஒண் தொளியனைத்தும் வாரமோத*
சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும்*
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*
ஆறாம் பாசுரம்:
உறியார்ந்த நறுவெண்ணெய் ஒளியால் சென்று* அங்கு
உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க*
தரியார்ந்த கருங்களிறே போல நின்று*
தடங்கண்கள் பனிமல்கும் தன்மையானை*
வெறியார்ந்த மலர்மகள் நாமங்கையோடு*
வியன் கலை எண் தோளினாள் விளங்கு* செல்வச்
செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும்*
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*
ஏழாம் பாசுரம்:
இருங்கைம்மா கரி முனிந்து பரியைக் கீறி*
இனவிடைகள் ஏழடர்த்து மருதம் சாய்த்து*
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு*
வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை*
கருங்கமுகு பசும்பாளை வெண்முத்து ஈன்று*
காய் எல்லாம் மரகதமாய் பவளம் காட்ட*
செருந்திமிகு மொட்டு அலர்த்தும் தேன்கொள் சோலைத்*
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*
எட்டாம் பாசுரம்:
பாரேறு பெரும்பாரம் தீரப்* பண்டு
பாரதத்துத் தூதியங்கி* பார்த்தன் செல்வத்
தேரேறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை*
செருக்களத்துத் திறலழியச் செற்றான் தன்னை*
போரேறு ஒன்றுடையானும் அளகைக் கோனும்*
புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல்*
சீரேறு மறையாளர் நிறைந்த* செல்வத்
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*
ஒன்பதாம் பாசுரம்:
தூவடிவின் பார்மகள் பூமங்கையோடு*
சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற*
காவடிவின் கற்பகமே போல நின்று*
கலந்தவர்கட்கு அருள் புரியும் கருத்தினானை*
சேவடிகை திருவாய் கண் சிவந்த ஆடை*
செம்பொன்செய் திருவுருவம் ஆனான் தன்னை*
தீவடிவின் சிவனயனே போல்வார்* மன்னு
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*
பத்தாம் பாசுரம்:
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை* நீல
மரதகத்தை மழை முகிலே போல்வான் தன்னை*
சீரணங்கு மறையாளர் நிறைந்த* செல்வத்
திருக்கோவலூரதனுள் கண்டேன் என்று*
வாரணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்*
வாள் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார்*
காரணங்களால் உலகம் கலந்தங்கேத்தக்*
கரந்தெங்கும் பரந்தானைக் காண்பர் தாமே*
பாசுர அர்த்தங்கள் பின்வரும் பதிப்புகளில் பதிவு பண்ணப்படும்.
தாசானு தாசன்
இராமானுஜ சிஷ்யன்
Subscribe to:
Posts (Atom)